ஓடும் காரில் திடீரென தீ
கரூரில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் கீேழ இறங்கி உயிர் தப்பினார்.
ஓடும் காரில் தீ
கரூர் வெண்ணைமலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கரூருக்கு காரில் வந்துள்ளார். பின்னர் கரூரில் இருந்து காரில் வெண்ணைமலைக்கு சென்றார்.
அப்போது கரூர் வையாபுரி நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனைக்கண்ட செந்தில்குமார் உடனே காரை நிறுத்தி கீழே இறங்கினார். பின்னர் காரில் இருந்து புகை அதிக அளவில் வெளியேறியது.
உயிர் தப்பினார்
இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்ேபரில், உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். காரில் இருந்து புகை வந்ததும் செந்தில்குமார் உடனடியாக இறங்கியதால் அதிர்ஷடவசமாக அவர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.