கொல்லம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அறையில் திடீர் தீ விபத்து
கேரள மாநிலம் கொல்லம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கொல்லம்,
கேரள மாநிலம் கொல்லம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் மேயர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவுவதை கண்டு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், தளவாடங்கள், தொலைக்காட்சி உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. மின்கசிவுதான் தீ விபத்துக்குக் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.