கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா

அரசு வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா

Update: 2023-02-06 18:45 GMT

விழுப்புரம்

செஞ்சி தாலுகா கம்மந்தூரை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 39). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தனக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், பலமுறை விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை என கோஷமிட்டதோடு தனக்கு வேலை கிடைக்கவில்லையெனில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர் கூறும்போது, நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படையில் பல அரசுப்பணிக்கான நேர்காணலில் கலந்துகொண்டேன். ஆனால் வேலை ஏதும் வழங்கப்படவில்லை. என்னுடன் நேர்காணலில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வேலையில் சேர்ந்துவிட்டார்கள். கூட்டுறவுத்துறை, மருத்துவ உதவியாளர், இரவு காவலர், கிராம உதவியாளர் என இதுபோல் பல நேர்காணலில் கலந்துள்ளேன். பணம் இல்லாத காரணத்தால் இந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் பல மனுக்களை அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரை, போலீசார், தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்