தர்மபுரி செட்டிக்கரையில் ரூ.3½ கோடியில் மாணவர் விடுதி

தர்மபுரி செட்டிக்கரையில் ரூ.3 கோடியே 66 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மிக ்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியை காணொலி காட்சி மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-11-02 19:30 GMT

தர்மபுரி செட்டிக்கரையில் ரூ.3 கோடியே 66 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மிக ்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியை காணொலி காட்சி மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மாணவர் விடுதி கட்டிடம்

தர்மபுரியை அடுத்த செட்டிக்கரையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.3 கோடியே 66 லட்சத்தில் புதிதாக அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் நல பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த மாணவர் விடுதி கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் மாணவர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து தர்மபுரி செட்டிக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் நல பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி கட்டிடத்தில் நடந்த விழாவில் கலெக்டர் சாந்தி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அவர் விடுதி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

100 மாணவர்கள் தங்கும் வசதி

புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் நல பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி கட்டிடம் தரைதளம், முதல்தளம் மற்றும் 2-வது தளத்துடன் 1465.65 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் மாணவர்கள் தங்குவதற்கு 25 அறைகள், நூலகத்துடன் கூடிய அரங்கம், சமையலறை கூடம், உணவு அருந்தும் கூடம், காப்பாளர் அறை, இருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டதாக உள்ளது. 100 மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி பயில்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் செல்வம், செட்டிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் சுமதி, இளநிலை பொறியாளர் பாலாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்.கணேசன், விடுதி காப்பாளர் ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்