கழுத்தில் உடைந்த பிளாஸ்டிக் குடத்துடன் சுற்றித்திரியும் தெரு நாய்
கழுத்தில் உடைந்த பிளாஸ்டிக் குடத்துடன் சுற்றித்திரியும் தெரு நாய் A stray dog with a broken plastic jug around its neck
குளச்சல்:
குளச்சல் மீன்பிடி துறைமுக சுற்று வட்டார பகுதிகளில் உணவு தேடி தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதில் ஒரு நாயின் கழுத்தில் நேற்று உடைந்த பிளாஸ்டிக் குடத்தின் கழுத்து பகுதி மட்டும் உடைந்து சிக்கிய நிலையில் உணவு அருந்த முடியாமல் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது.
நாயின் நிலையை கண்ட அந்த பகுதி மக்கள் அதை பிடித்து அதன் கழுத்தில் சிக்கியுள்ள உடைந்த குடத்தின் பகுதியை அகற்ற முயன்றனர். ஆனால், நாய் அவர்களின் கையில் சிக்காமல் ஓடியது. மேலும், அந்த நாய் உணவருந்த முடியாமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தீயணைப்பு வீரர்கள் அந்த நாயின் கழுத்தில் சிக்கியுள்ள உடைந்த குடத்தின் பகுதியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.