புரோட்டா மாஸ்டருக்கு கத்திக்குத்து
உவரி அருகே புரோட்டா மாஸ்டருக்கு கத்திக்குத்து விழுந்தது.
திசையன்விளை:
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் புதுவீட்டு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவா் சுரேஷ் (வயது 27). இவர் நெல்லை மாவட்டம் உவரி அருகே குட்டம் தோப்புவிளை பகுதியில் உள்ள ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த கடையில் தூத்துக்குடி மாவட்டம் செட்டிவிளை பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் புரோட்டா கேட்டு வந்தார். ஆனால் சுரேஷ் புரோட்டா காலியாகிவிட்டது என்று தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரான்சிஸ் தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சுரேசை குத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உவரி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து, பிரான்சிசை வலைவீசி ேதடிவருகிறார்.