சனிக்கிழமை பொங்கல் பண்டிகைசிறப்பு வாரச்சந்தை
உடன்குடியில் சனிக்கிழமை பொங்கல் பண்டிகைசிறப்பு வாரச்சந்தை நடக்கிறது.
உடன்குடி:
உடன்குடி தேர்வு நிலைபேரூராட்சி செயல் அலுவலர் பாபு வெளியிட்டுளள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி கட்டுப்பாட்டில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். இந்த வாரம் மட்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி் இன்று(சனிக்கிழமை) சிறப்பு வாரச்சந்தை காலையில் இருந்து இரவுவரை செயல்படும். வாரச்சந்தையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.