சேலம் வழியாக ஈரோட்டுக்கு சிறப்பு ரெயில்-நாளை மறுநாள் முதல் இயக்கப்படுகிறது

மராட்டிய மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக ஈரோட்டுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் நாளை மறுநாள் முதல் இயக்கப்படுகிறது.

Update: 2023-04-18 20:39 GMT

சூரமங்கலம்:

வாராந்திர சிறப்பு ரெயில்

மராட்டிய மாநிலம் நான்டேட் பகுதியில் இருந்து சேலம் வழியாக ஈரோட்டுக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை வாராந்திர சிறப்பு ரெயில் வெள்ளிக்கிழமை களில் இயக்கப்படுகிறது.

அதன்படி நாளை மறுநாள் நான்டேட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 07189) புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 12.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

முன்பதிவு

இதேபோல் மறு மார்க்கத்தில் ஈரோடு-நான்டேட் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07190) வருகிற 23-ந் தேதி முதல் ஜூலை மாதம் 2-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து 23-ந் தேதி காலை 5.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, காலை 6.12 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர் வழியாக திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நான்டேட் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில்களில் இரண்டடுக்கு ஏ.சி. பெட்டி-2, மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி-5, 2-ம் வகுப்பு படுக்கை வசிதி பெட்டிகள்-7, 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகள்-2 மற்றும் லக்கேஜ்-பிரேக் வேகன்-1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்