தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில்- 28-ந் தேதி இயக்கப்படுகிறது

தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் 28-ந் தேதி இயக்கப்படுகிறது

Update: 2023-04-25 20:25 GMT


தென்னக ரெயில்வே சார்பில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு வழி சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06051) வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 6.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. காலை 8.45 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில், 14 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட 1.3 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்