கடைவீதிக்குள் புகுந்த பாம்பு
பெண்ணாடத்தில் கடைவீதிக்குள் பாம்பு புகந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் கடைவீதி நேற்று வழக்கம் போல் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் சிலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த பாம்பு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ஸ்கூட்டரின் முன்பகுதியின் உள்ளே புகுந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். இருப்பினும் இளைஞர்கள் சிலர் அந்த பாம்பை பிடித்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த பாம்பு வெளியே வரவில்லை.
இதையடுத்து, ஸ்கூட்டரின் முன்பக்கத்தை கழற்றினர். அப்போது, அதில் இருந்த பாம்பை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர். பெண்ணாடம் கடைவீதி பகுதியில் அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.