தஞ்சை அருகே வல்லம் இரட்டை அக்ரஹாரம் பகுதியில் ஒரு வீட்டிற்குள் நேற்று மாலை 10 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது. இதுகுறித்து வல்லம் பேரூராட்சிக்கு அந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள பாம்பை லாவகமாக பிடித்து சாக்குபையில் போட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.