பேக்கரிக்குள் புகுந்த பாம்பு
பேக்கரிக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி பஸ் நிலையம் அருகே ஷாஜி என்பவரது வீட்டிற்கு அருகே, அவருக்கு சொந்தமான பேக்கரி உணவு பொருட்களை தயார் செய்யும் அடுமனை உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை 3.30 மணிக்கு பேக்கரிக்குள் சாரை பாம்பு புகுந்தது. இதை கண்டு அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்புசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை தேடி பார்த்தனர். அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விறகு கட்டைகளுக்கு இடையே பதுங்கி இருந்த 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். பின்னர் அதை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுச் சென்று பாதுகாப்பாக விடுவித்தனர். பேக்கரி அடுமனைக்குள் பாம்பு புகுந்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.