வாலிபருக்கு அரிவாள் வெட்டு

கும்பகோணம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-12 19:10 GMT

திருவிடைமருதூர்:

புதுச்சேரி காலம்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுகன் (வயது28). இவர் திருட்டு வழக்கில் தொடர்புடையவர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விருபாட்சிபுரத்தை சேர்ந்த கரிகாலன் மகன் சுரேஷ். இவர் அடிதடி வழக்கில் புதுச்சேரி கோர்ட்டுக்கு சென்ற போது சுகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுரேஷ் தனது மாமாவான கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வீட்டில் சுகனை தங்க வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேஷின் அண்ணன் சுதாகர், சுகனின் மோட்டார் சைக்கிளை அருகில் எடுத்துச் சென்று வருவதாக கூறி விட்டு எடுத்துச் சென்றவர் இரவு வரை அதை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சுகன், மதுபோதையில் நண்பர்களுடன் இருந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் சுரேஷ், சுதாகர் உள்பட 3 பேர் இரவு வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த சுகனிடம் எங்களிடமே தகராறு செய்கிறாய் என கேட்டு விரட்டி அவரை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுகன், கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்