வாலிபருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-01-07 20:42 GMT

பாளையங்கோட்டை சமாதானபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 26). மீன் வியாபாரியான இவருக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே மீன் தொழில் செய்வது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 2 பேர் சேர்ந்து ஜெகதீஷை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்