சாலையில் சென்ற நபருக்கு லாரியில் இருந்து விழுந்த பாசக்கயிறு - நொடியில் நடந்த அதிர்ச்சி
லாரியின் இருந்த கயிறு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தை இறுக்கி தூக்கி எரிந்தது.;
தூத்துக்குடி ,
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தபோது, திடீரென லாரியில் இருந்து உரமூட்டையுடன் கயிறு கீழே விழுந்தது.
அந்த கயிறு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தை இறுக்கி தூக்கி எரிந்தது. இந்த விபத்தில் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், பதைபதைக்க வைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.