போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணக்கோலத்தில் தஞ்சம் அடைந்த காதல்ஜோடி
திருவண்ணாமலையில் திருமணம் செய்த காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் திருமணம் செய்த காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
'இன்ஸ்டாகிராம்' மூலம் அறிமுகம்
செங்கம் தாலுகா மேல்செங்கம் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன். பட்டதாரியான இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சவுமியாவுக்கும் (வயது 20) கடந்த 2 வருடங்களுக்கு முன்'இன்ஸ்டாகிராம்' மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
இவர்களது காதல் விவகாரம் சவுமியாவின் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சவுமியா வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் காதலன் பூவரசனுடன் திருவண்ணாமலைக்கு வந்தார்.
மாலையுடன் தஞ்சம்
இங்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த சவுமியாவின் குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் மாலையுடன் மணக்கோலத்தில் பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அது குறித்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
மாலையுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.