அரசு பஸ் கண்டக்டரை கண்டித்து சாலை மறியல்

அரசு பஸ் கண்டக்டரை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

Update: 2023-07-18 19:41 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே வலையப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் மேலாண்மறைநாடு பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றனர். பின்னர் இவர்கள் வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் அரசு பஸ்சில் பள்ளி சீருடையுடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கண்டக்டர் மாணவர்களிடம் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறியதாக தெரிகிறது. நாங்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்கிறோம். பள்ளி சீருடையில் தான் இருக்கிறோம் என அவர்கள் கூறியும் கண்டக்டர் கண்டிப்பாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆதலால் 2 மாணவர்கள் காசு கொடுத்து டிக்ெகட் பெற்றனர். ஒரு மாணவர் மட்டும் ரூ.1 குறைவாக இருப்பதாக கூறினார். ஆதலால் வலையபட்டியில் இறங்க வேண்டிய அந்த மாணவனை சற்று தூரம் கழித்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து வலையபட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்