தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-15 20:31 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை காலேஜ் முக்கம் பகுதியில் செல்லும் கிராம இணைப்பு சாலை உள்ளது. கிராம இணைப்புசாலை வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த பகுதியில் மீன்பிடி பிரதான தொழிலாக உள்ளது. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை, இந்த சாலை வழியாக வாகனங்களில் மார்க்கட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.

தரைப்பாலம்

இந்த கிழக்கு கடற்கரை சாலையில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த பாலம் வழியாக இரவு செல்லும் வாகன ஓட்டிகள் தடுப்புச்சுவர் இல்லாததால் தடுமாறி வாய்க்காலுக்கு விழும் அபாயம் உள்ளது.

மழைக்காலங்களில் பாலத்தைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்பவர்கள் தடுமாறி வாய்க்காலுக்குள் விழும் நிலை இருந்து வருகிறது.

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

பாலம் கட்டும் போது குறுகிய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. இதனையடுத்து கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்க பணி நடைபெற்ற போது தடுப்புச் சுவரை விட சாலை உயர்ந்தது காணப்படுகிறது. இதை பல ஆண்டுளாக சீரமைக்கப்படவில்லை.

இந்த பாலத்தின் அருகில் தான் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏறிச் செல்லப்படுகிறது. எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்