மாநில தேவராட்டத்தில் சாதனை படைத்தஅரசுபள்ளி மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு
மாநில தேவராட்டத்தில் சாதனை படைத்த அரசுபள்ளி மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
எட்டயபுரம்:
தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் விளாத்திகுளம் அருகே உள்ள கோடங்கிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9,10-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் தேவராட்டத்தில் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றனர். அந்த மாணவ மாணவிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பாராட்டி, பஸ்கட்டண உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, ஆசிரியர்கள் சந்திரவேல், இளவரசி, அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.