பஸ் நிலைய விரிவாக்கம் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்

பேரணாம்பட்டு பஸ் நிலைய விரிவாக்கம் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2022-11-10 18:13 GMT

பேரணாம்பட்டு பஸ் நிலைய வரிவாக்கம் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் பஸ் நிலையத்தை போலீஸ் நிலையம் எதிரே உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் மாற்றியமைத்து நவீன கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் தரப்பில் பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கையை ஏற்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக போலீஸ் நிலையம் எதிரே உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு பஸ்நிலையத்தை மாற்றியமைப்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்யப்படும் என்றும், இது குறித்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

பின்னர் பேரணாம்பட்டு நகராட்சி குப்பை கிடங்கு அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நகராட்சிக்கு வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு வருவாய்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் நகரில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகள், நாய்களை பிடிக்கவும், நகரில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் சாலையில் இரு பக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது அமலு விஜயன் எம்.எல்.ஏ., சப்- கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை தாசில்தார் வடிவேல், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, நகராட்சி துணைத் தலைவர் ஆலியார்ஜூபேர் அஹம்மத், நகராட்சி கவுன்சிலர் அப்துல் ஐமீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்