ஊட்டச்சத்து அடங்கிய உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
ஊட்டச்சத்து அடங்கிய உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
சிக்கல்:
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் அனைத்து காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்வேளூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி ஊராட்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். நாகை மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் சங்கீதா, காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய உணவு பொருட்களை வழங்கினார். இதில் கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ், காசநோய் பிரிவு அலுவலர்கள் மருதுபாண்டியன், தமிழ்செல்வன், விஜயகுமார், தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.