தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு புதிய வீடு வழங்கும் நிகழ்ச்சி

கருப்பம்புலத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு புதிய வீடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-12-26 18:45 GMT

வாய்மேடு:

நாகை மாவட்டம் கருப்பம்புலம் கீழக்காடு பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது60). விவசாயி. இவருடைய கூரை வீடு கடந்த மாதம் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானது. இதை அறிந்த கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்றும் ஆயக்காரன்புலம் அரிமா சங்கத்தினர், பொதுமக்கள் சார்பில் பாதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் ஆன வீடு அமைத்து கொடுக்கப்பட்டது. இந்த புதிய வீட்டை அவரிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராம்ஸ், ஆயக்காரன்புலம் அரிமா சங்க தலைவர் மாதவன், செயலாளர் வைத்தியநாதன், பொருளாளர் முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டு, புதிய வீட்டை விவசாயிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்