மாட்டுக்கொட்டகையை சுத்தம் செய்தபோது கர்ப்பிணி பலி
திருப்பத்தூர் அருகே மாட்டுக்கொட்டகையை சுத்தம் செய்தபோது கர்ப்பிணி பலியான நிலையில். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தாயார் போலீசில் புகார் அளித்துள்ளதார்.
திருப்பத்தூர் அருகே மாட்டுக்கொட்டகையை சுத்தம் செய்தபோது கர்ப்பிணி பலியான நிலையில். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தாயார் போலீசில் புகார் அளித்துள்ளதார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி
திருப்பத்தூர் அருகே உள்ள சின்னபசலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாதேசிங்கு (வயது 30). நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். சிங்கப்பூருக்கு சென்று பணியாற்றி விட்டு திரும்பிய இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இவருக்கும் அண்ணான்டபட்டி கிராமத்தை சேர்ந்த பூர்ணிமா (25) என்ற பெண்ணுக்கும் 4 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான். தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பூர்ணிமா நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்டகைகையை 'வாட்டர் சர்வீஸ்' செய்யும் கருவியில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
நீண்ட நேரமாகியும் மாட்டுக்கோட்டையில் இருந்து பூர்ணிமா வெளியே வரவில்லை. அவரை தேடி மாமியார் சென்று பார்த்தபோது 'வாட்டர் சர்வீஸ்' செய்யும் கருவியுடன் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி அவர் இறந்திருக்கலாம் என தெரிகிறது.
இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து பூர்ணிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் மர்மம்
இந்த நிலையில் சேர்ந்த பூர்ணிமாவின் தாயார் கீதா (வயது 46), தாலுகா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ''எனது மகள் பூர்ணிமாக்கும் சின்பசலிகுட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா தேசிங்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. அடிக்கடி வரதட்சணை கேட்டு பூர்ணிமாவை ராஜா தேசிங்கு அடித்து துன்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் பூர்ணிமா மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறுவதில் சந்தேகம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும்'' என கூறியுள்ளார்.
திருமணம் ஆகி நான்கு வருடங்களே ஆகியுள்ளதால் பூர்ணிமாவின் சாவு குறித்து சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.