3 மாதமாக தலைமறைவாக இருந்தவர் கைது

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் 3 மாதமாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-15 20:29 GMT

முக்கூடல்:

பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2014-ம் வருடம் அடிதடி வழக்கில் ஈடுபட்டதாக ஆலங்குளம், காசிநாதபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் கோர்ட்டு விசாரணைக்கு கடந்த 3 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து சிவசுப்பிரமணியனை பாப்பாக்குடி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்