புகையிலை பொருட்களை விற்றவர் கைது
புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர். அப்போது முத்துவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மதியழகன் (வயது 52) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.