கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-20 18:51 GMT

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி (வயது 53) என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்