வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்றவர் கைது
ஆம்பூர் அருகே வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த ராமச்சந்திரபுரம் பகுதியில் வெளி மாநில மதுபாக்கொட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த நாராயணன் (வயது 39) என்பவர் கர்நாடகா மாநில மது பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 250 மது பாக்கெட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.