ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-02 20:07 GMT

சூரமங்கலம்:-

சேலம் வழியாக சென்ற குர்லா-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட 12 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த ரமேஷ் (வயது 37) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரமேசை கைது செய்த போலீசார், 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்