காரில் புகையிலை கடத்தியவர் கைது
நாசரேத்தில் காரில் புகையிலை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள அகப்பைக்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக நாசரேத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். இதில் காரின் பின்பகுதியில் 110 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 110 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றிய போலீசார், காரின் உரிமையாளரான அகப்பைகுளம் 1-வது தெருவை சேர்ந்த செல்வன் விக்டர் (வயது 58) என்பவரை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர்.