36 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது

36 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது

Update: 2022-10-19 21:21 GMT

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கொல்லங்கோடு அருகே உள்ள மங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் திருவிதாங்கோடு அருகே உள்ள பண்டாரவிளையை சேர்ந்த புகாரி (வயது 51) என்பதும், கேரள மாநிலம் கோவளத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 மூடைகளில் இருந்த 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து புகாரியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்