மேல்மலையனூரில் விவசாயியிடம் ஜேப்படி செய்தவர் கைது
மேல்மலையனூரில் விவசாயியிடம் ஜேப்படி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் பஜார் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சம்பத் (வயது 38), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு ஊஞ்சல் உற்சவம் காண்பதற்காக சென்றிருந்தார். அன்னபூரணி அம்மன் கோவில் அருகில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு பெண் சம்பத்தின் சட்டைப்பையில் இருந்த ரூ.200-யை ஜேப்படி செய்து விட்டு தப்பி ஓடினார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மடக்கிப்படித்து வளத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள திண்டிவனம் சாலையை சேர்ந்த கஜேந்திரன் மனைவி சாந்தி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து சாந்தியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த ரூ.200-யை பறிமுதல் செய்தனர்.