வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி ரூ.1¼ கோடி மோசடி செய்தவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி 44 பேரிடம் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி ரூ.1¼ கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-12 11:34 GMT

கோவை:

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் டேவிட் பால் என்கிற சின்னப்பன் (வயது 57). இவர் துடியலூர் அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறார். மேலும் பெரியநாயக்கன்பாளையத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் டேவிட் பால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி ஆன்லைன் மூலம் தகவல் கொடுத்தார். இதனை நம்பி டேவிட் பாலை, தொடர்பு கொண்ட பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தார்.

தமிழகம் முழுவதும் 44 பேரிடம் ரூ.1 கோடியே 28 லட்சத்து 54 ஆயிரத்து 399 பெற்று மோசடி செய்தார். இதுகுறித்து சென்னையை சேர்ந்த சகாயராஜ் என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திடேவிட் பாலை கைது செய்தனர் . அவர் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் டேவிட் பால் போலீசிடம் இருந்து தப்ப ஏராளமான சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார். ஒவ்வொருவரிடம் மோசடி செய்யும்போதும் ஒவ்வொரு சிம்கார்டுகளை பயன்படுத்துவார். வீட்டு அருகில் வந்தவுடன் வேறு ஒரு சிம்கார்டை பயன்படுத்துவார்.

இவ்வாறு நீண்டகாலம் மோசடி செய்த டேவிட் பாலை போலீசார் துடியலூர் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்