அயோத்தியாப்பட்டணம்:-
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலையில் காரிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 855 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த பள்ளிப்பட்டியை சேர்ந்த குமார் (40) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அந்த சமயம் கார் டிரைவரான பேளூரை சேர்ந்த சதீஷ்குமார் 33 என்பவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் விசாரணையில் 855 மதுபாட்டில்களும் குள்ளம்பட்டி டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமாரை கைது செய்தனர். டிரைவர் சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் குள்ளம்பட்டி டாஸ்மாக் ஊழியரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மதுபாட்டில்களை ெமாத்தமாக கொடுத்ததற்காக கடை விற்பனையாளர் ரங்கசாமி (46), உதவி விற்பனையாளர் ஸ்ரீதரன் (55) ஆகியோரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.