மது பாட்டில்களை விற்பனைக்காக வாங்கிச்சென்றவர் கைது

மது பாட்டில்களை விற்பனைக்காக வாங்கிச்சென்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-10 18:45 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் கோடாலி பொன்னாற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மொபட்டில் வந்த உதயநத்தம் காலனி தெருவை சேர்ந்த சின்னமணி மகன் சுதாகர் என்பவரை தடுத்து சோதனை செய்தனர். அவரிடம் 19 அரசு மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசு அனுமதி இல்லாமல் பதுக்கி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை வாங்கிச் சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து சுதாகரை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் அவர் ஓட்டி வந்த மொபட் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்