மோட்டார்சைக்கிளில் சென்றவர் ஆட்டோ மோதி பலி

ஆரணி அருகே மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2023-10-04 18:45 GMT

ஆரணி

ஆரணி அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவர் ஆட்டோ மோதி பலியானார்.

குடும்பம்

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லில்லி. இவர்களுக்கு அஸ்வினி (12), ஸ்ரீ லேகா (8) என்ற மகள்களும் அகிலேஷ் என்ற (6 மாதம்) மகனும் உள்ளனர்.

நேற்று அதிகாலை ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ராஜீவ்காந்தி வேலைக்கு புறப்பட்டார். ஆரணி- ஆற்காடு நெடுஞ்சாலையில் மெய்யூர் கூட்டுரோடு அருகே சென்றபோது கறிவேப்பிலை ஏற்றி வந்த ஆட்டோ முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றது. அப்போது அந்த ஆட்டோ இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் ராஜீவ் காந்திக்கு தலையிலும் தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விசாரணை

தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த ராஜீவ் காந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அவர் ஹெல்மெட்டை சரியான முறையில் அணிந்திருந்தால் இறப்பிலிருந்து தப்பியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

\இது தொடர்பாகவிபத்து ஏற்படுத்திய ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரான ஷாஜகனை போலீசார் கைது செய்து ராஜீவ்காந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்