செல்போனை பறித்த வாலிபர் கைது

செல்போனை பறித்த வாலிபர் கைது

Update: 2022-12-30 16:27 GMT

பல்லடம்

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் வசித்து வரும் தனபால் (வது18). இவர் கடந்த 29-ந் தேதி காரணம்பேட்டை நால்ரோடு சிக்னல் அருகே நடந்து வரும் போது தனது சட்டை பையில் இருந்த செல்போனை பேசுவதற்காக எடுத்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரது செல்போனை பறித்துச் சென்று விட்டதாக தனபால் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் போலீசார் பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகத்தின் பேரில் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கடந்த 29-ந்தேதி இரவு தனபாலிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். மேலும் அவர் சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த சந்தோஷ்குமார், (33) என்பதும் தெரியவந்தது. பல்லடம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்