கால்நடைகளை கொண்டு செல்ல அனுமதி பெற வேண்டும்
திருவண்ணாமலையில் நடைபெறும் சந்தைக்கு கால்நடைகளை கொண்டு செல்ல அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை கால்நடை சந்தைகள் நடைபெற உள்ளது. சந்தைக்கு கால்நடைகளை அழைத்து செல்ல விருப்பம் உள்ளவர்கள் ராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனருக்கு தெரிவித்து, வேலூர், கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குனரின் பதிவு மற்றும் அனுமதி பெற்று கால்நடைகளை அழைத்து செல்லலாம்.
மேலும், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி உரிய பதிவு மற்றும் அனுமதி பெறாமல் கால்நடை சந்தைக்கு அழைத்துச் செல்லப்படும் கால்நடைகள் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
இந்த தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.