விபத்தில் ஒரு மாத பெண் குழந்தை பலி

விபத்தில் ஒரு மாத பெண் குழந்தை பலி;

Update:2023-06-04 00:15 IST


தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(வயது 60). இவர் குடும்பத்தினருடன் ராமேசுவரம் சென்று சாமி கும்பிட்டு விட்டு காரில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது நெல்லையில் இருந்து டாக்டர் சரண்ஜித்ராஜா (32) என்பவர் தனது மனைவி சோசினி மண்டல், மாமனார் சபாசி மண்டல், மாமியார் இந்திராணி மற்றும் டாக்டரின் ஒரு வயது பெண் குழந்தை நிதாரா ஆகியோருடன் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் வந்து கொண்டிருந்தனர். இவரது, கார் டயர் வெடித்ததில் இருவரின் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைவரும் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வரும் வழியிலேயே டாக்டர் சரண்ஜித் ராஜாவின் ஒரு மாத பெண் குழந்தை நிதாரா பரிதாபமாக இறந்தது. மற்ற அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்