கல்லுக்குழியில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சாவு
கல்லுக்குழியில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சாவு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்யாண் சர்க்கார்(வயது 32) என்பவர் தங்கியிருந்து, கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று பாறையில் எந்திரம் மூலம் துளையிடும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென தவறி கல்லுக்குழியில் விழுந்தார். இதனால் கல்யாண் சர்க்காரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சக தொழிலாளர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.