கழிவறை அருகே பதுங்கி இருந்த நல்லபாம்பு

நாகலூர் அரசு பள்ளியில் கழிவறை அருகே பதுங்கி இருந்த நல்லபாம்பு மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

Update: 2022-11-30 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உள்ள நாகலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நேற்று காலை வகுப்பு இடைவேளையின்போது மாணவிகள் பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறைக்கு சென்றனர் அப்போது அருகே உள்ள புதரில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் எழுப்பியபடியே ஓட்டம் பிடித்தனர். அப்போது சக மாணவ-மாணவிகளும் அவர்களுடன் சேர்ந்து ஓடினர்.

பின்னர் இது குறித்து ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து புதருக்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். விசாரணையில் அது 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு என தெரியவந்தது. பாம்பை பிடித்த இடத்தில் 5 முட்டைகள் இருந்ததையும் தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அந்த பாம்பு முட்டையிட்டு அடை காத்து வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் பிடிபட்டபாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதுகுறித்து மாணவி ஒருவர் கூறும்போது, பள்ளி கழிவறை பகுதி மற்றும் பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதாகவும், இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தை ஆய்வு செய்து புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்