ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்
சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
சீர்காழி:
சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலஞ்சேரி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கூட கட்டிட திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், சரவணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உஷா நந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டர் வரவேற்றார். விழாவில் . பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.