வேலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

வேலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-07-24 16:46 GMT

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாநாடு வேலூரில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சுடரொளியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சார்லஸ், கோட்டீஸ்வரன், யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் தாலுகா செயலாளர் ஜெய்கணேஷ் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் சத்தியானந்தம் சங்க கொடியேற்றினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சங்க மாநில துணைத்தலைவர் கார்த்தீஸ்குமார், துணை செயலாளர் பாலசந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மாநாட்டில், மத்திய அரசு அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பதை கைவிட வேண்டும். வேலூர் மாநகரின் மையத்தில் அரசு பல்நோக்கு மருத்துவமனை உடனடியாக தொடங்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும். விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மக்கான் சிக்னல் சந்திப்பில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு அண்ணாசாலை வழியாக வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்