புதிய பாலம் கட்ட வேண்டும்
உடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பில்லாஞ்சி சோமசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய்க்கு மேல் சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் உடைந்தும், சிமெண்டு பூச்சு உதிர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. நீண்ட நாட்களாகியும் இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. நகராட்சி நிர்வாகம் சிறு பாலத்தை அகற்றி விட்டு புதிதாக சிறுபாலம் கட்டித் தர ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.