பேன்சி கடையில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்

பேன்சி கடையில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-27 18:58 GMT

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அந்த பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் இவரது கடைக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் இருந்த கோபாலகிருஷ்ணனை தாக்கி கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெளியே சென்று இருந்த பாலமுருகன் திரும்பி வந்து பார்த்தபோது கடை சேதப்படுத்தப்பட்டு கிடந்தது. மேலும் கோபாலகிருஷ்ணன் அந்த கும்பலால் தாக்கப்பட்டதும் தெரியவந்தது. இதில் கோபாலகிருஷ்ணன் காயமடைந்தார். இதுகுறித்து பாலமுருகன் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்