மோட்டார் சைக்கிள் மோதியதில்3 வயது குழந்தை காயம்

தேனி அருகே மோட்டார்சைக்கிள் மோதியதில் 3 வயது குழந்தை காயம் அடைந்தது.

Update: 2023-04-13 18:45 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்கணேசன். இவருடைய மகள் மிருதுளா (வயது 3). குழந்தை மிருதுளா தனது தாயாருடன், பழனிசெட்டிபட்டி பெரிய தெருவில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், குழந்தையின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ராஜ்கணேசன் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்