மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட்

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

Update: 2023-01-21 11:08 GMT

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

மொபட் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட்டை வழங்கினார்.

இதில் 24 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 92 ஆயிரத்து 400 மதிப்பில் மொபட் வழங்கப்பட்டது.

பயணியர் நிழற்கூடம்

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருவண்ணாமலை மேல்புத்தியந்தல் பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்கூடம் மற்றும்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருவண்ணாமலை வேங்கிக்கால் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்கூடம் ஆகியவற்றை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, மு.பெ.கிரி எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன்,

திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி, துணைத்தலைவர் ரமணன், ஆணையாளர் பரமேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவ்ஆனந்த், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் இல.சரவணன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை வெங்கட், வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்