தகவல் பலகை கம்பங்களை திருடிச்சென்ற மினி லாரி கவிழ்ந்தது

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தகவல் பலகை கம்பங்களை திருடிக்கொண்டு சென்ற மினிவேன் போலீசார்பிடிக்க முயன்றதால் அதிவேகமாக சென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-02 18:45 GMT

வாணாபுரம்

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தகவல் பலகை கம்பங்களை திருடிக்கொண்டு சென்ற மினிவேன் போலீசார்பிடிக்க முயன்றதால் அதிவேகமாக சென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நள்ளிரவுரோந்து

வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் பழையனூர் சாலை உள்ளிட்ட பகுதியில் நள்ளிரவில் ரோந்து பணியில் மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி போலீசாரை பார்த்தவுடன் அதிவேகமாக செல்ல முயன்றது.

அதனை பின்தொடர்ந்த போலீசார் மடக்கி பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் மினி லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. உடனே அதிலிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு சென்ற பார்த்தபோது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தகவல் பலகை மற்றும் வேகத்தடையை குறிக்கும் வகையில் உள்ள கம்பங்கள் உள்ளிட்டவை இருந்தன.

இந்த கம்பங்களை தப்பி ஓடியவர்கள் சாலையில் இருந்த பெயர்த்தெடுத்து திருடிச்சென்று கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

பறிமுதல்

இதனையடுத்து போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்து தகவல் பலகை கம்பங்களை மிட்டனர்.

தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர் இதன் மதிப்பு 50 ஆயிரம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வீடு புகுந்து திருட்டு, கடை, அலுவலகங்களில் திருட்டு தான் நடைபெற்று வந்தது. இப்போது சாலையோரத்தில் பொதுமக்கள் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த வழிகாட்டும் தகவல் பலகைகள், விபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வேலகத்தடை அறிவிப்பு கம்பங்களைேய சாலையிலிருந்து மர்மநபர்கள் பெயர்ெதடுத்து திருடிச்சென்றபோது தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்