"ஆ.ராசாவின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு" என அறிவித்த இந்து அமைப்பை சேர்ந்தவர் கைது

திமுக எம்.பி.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசளிக்கப்படும் என முகநூலில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-22 03:59 GMT

மதுரை,

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், திமுக எம்.பி.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசளிக்கப்படும் என முகநூலில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் முகநூலில், திமுக எம்.பி ராசா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரது நாக்கை அறுத்து கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரொக்கமும், ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக உத்தப்பநாயக்கணூர் போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்