காவிரி ஆற்றில் மிதந்த ஆண் பிணம்
காவிரி ஆற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தில்லைநாயகம்படித்துறை அருகே காவிரி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் நேற்று பகல் 2 மணி அளவில் ஆண் பிணம் மிதந்து வந்தது. இதைக்கண்ட அந்த பகுதியினர் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று காவிரி ஆற்றில் இறங்கி உடலை மீட்டு மேலே தூக்கி வந்தனர். அந்த நபருக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. ஆற்றில் குளித்து கொண்டு இருந்தபோது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.