விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், மீன்சுருட்டி அருகே உள்ள வெண்ணங்குழி கிழக்கு தெருவை சேர்ந்த சோலைராஜனின் மகன் ஸ்ரீராம்(வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.